உத்தரகாண்டில் மது குடிக்க வைத்து சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை- டாக்சி டிரைவர்கள் 2 பேர் கைது

சுற்றுலா தலத்துக்கு காரில் செல்வதாக கூறி சிறுமியை அழைத்து சென்றனர். கடைக்கு சென்ற மகளை காணாமல் அவரது பெற்றோர் தவித்தனர்.
உத்தரகாண்டில் மது குடிக்க வைத்து சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை- டாக்சி டிரைவர்கள் 2 பேர் கைது
Published on

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா தன்யா பகுதியை சேர்ந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர்கள் மோகித் ( வயது 20) மற்றும் பிரதீப் (24). இவர்கள் டாக்சி டிரைவர்கள்.

பக்கத்து வீட்டினர் என்பதால் சிறுமி அவர்களிடம் பழகி வந்தார். சம்பவத்தன்று சிறுமி அங்குள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்க சென்றார். அப்போது மோகித், பிரதீப் ஆகிய இருவரும் சிறுமியிடம் பேச்சு கொடுத்தனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள சுற்றுலா தலத்துக்கு காரில் செல்வதாக கூறி சிறுமியை அழைத்து சென்றனர். ஹால்ட்வானியின் கத்கோடம் பகுதியில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் கார் சென்றபோது சிறுமியை அவர்கள் கட்டாயமாக மது குடிக்க வைத்தனர். பின்னர் காரிலேயே வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இதனிடையே கடைக்கு சென்ற மகளை காணாமல் அவரது பெற்றோர் தவித்தனர். பின்னர் அவர்கள் கத்கோடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் உடனடியாக தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது கத்கோடம் சாலை ஓரத்தில் கார் நிறுத்தப்பட்டிருப்பதை பார்த்தனர்.

உள்ளே சிறுமி அரைகுறை ஆடையுடன் மயங்கிய நிலையில் கிடந்தாள். உடனே போலீசார் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அழுதாள். இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி டாக்சி டிரைவர்கள் மோகித், பிரதீப் ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் உத்தரகாண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com