ஜிபிஎஸ் நோய் பாதிப்பு- 2 கிராமங்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

மகாராஷ்டிராவில் ஜி.பி.எஸ். நோயால் பாதிக்கப்பட்ட யாத்ரீகர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.ஜிபிஎஸ் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களை பாதிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஜிபிஎஸ் நோய் பாதிப்பு-  2 கிராமங்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
Published on

மகாராஷ்டிராவில் இருந்து திரும்பிய சில யாத்ரீகர்கள் கடுமையான வயிற்றுப்போக்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 2 கர்நாடக கிராமங்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் ஜி.பி.எஸ். (GBS) நோயால் பாதிக்கப்பட்ட யாத்ரீகர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சுகாதார அதிகாரிகளின் கூறுகையில், யாத்ரீகர்களின் நோய்க்கான காரணத்தை அறிய அவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஜி.பி.எஸ். உள்ள 3 பேரில் 2 பேருக்கு வயிற்றுப்போக்கு, சுவாச நோய்த்தொற்று பாதிப்புகள் உள்ளது. இது பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் கூறுகையில், ஜி.பி.எஸ். நோய் குறித்து கவலைப்படத் தேவையில்லை. எந்தவொரு அவசரநிலையையும் சமாளிக்க தனது துறை முழுமையாகத் தயாராக உள்ளது.

மகாராஷ்டிராவின் புந்தர்பூரில் இருந்து திரும்பிய 60 யாத்ரீகர்களில் 33 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர் என்றும், அவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜி.பி.எஸ். என்பது ஒரு அரிய தன்னுடல் தாக்க நிலையாகும், இது உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு, புற நரம்பு மண்டலத்தைத் தாக்குகிறது. இது உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் தசை பலவீனம் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது.

இருப்பினும் முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் இதில் இருந்து முழுமையாக மக்களை மீட்க முடியும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஜி.பி.எஸ். எந்த வயதிலும் ஏற்படலாம். ஆனால் இது பொதுவாக 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களை அதிகம் பாதிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com