கேமிங் மசோதா விளைவு: பணம் வைத்து விளையாடும் Game-களை நிறுத்துவதாக Dream11, MPL அறிவிப்பு

இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.இந்த அறிவிப்பு உடனே அமலுக்கு வரும் என MPL தனது LINKEDIN பதிவில் உறுதிப்படுத்தி உள்ளது.
கேமிங் மசோதா விளைவு: பணம் வைத்து விளையாடும் Game-களை நிறுத்துவதாக Dream11, MPL அறிவிப்பு
Published on

சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த மசோதா சட்டமானால் பெரு நிறுவனங்கள் பல அடி வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிரிக்கெட் பெட்டிங் கம்பெனிகள். அதிலும் பிரபலமாக விளங்கும் Dream 11, MPL (மொபைல் பிரீமியர் லீக்) ஆகியவை.

எனவே இந்நிறுவனங்கள் தங்கள் தளத்தில் நிஜ பணத்தை வைத்து விளையாடும் கேம்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

Dream 11 உடைய தாய் நிறுவனமான Dream sports மற்றும் MPL இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உடனே அமலுக்கு வரும் என MPL தனது LINKEDIN பதிவில் உறுதிப்படுத்தி உள்ளது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com