துபாய் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் விமான சேவை.. பத்திரமாக இந்தியா வந்திறங்கிய பயணிகள்

துபாய், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து இயக்கப்படுகின்றன.டெல்லி, கொச்சி, கோழிக்கோடு, மங்களூரு, மும்பை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.
துபாய் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் விமான சேவை.. பத்திரமாக இந்தியா வந்திறங்கிய பயணிகள்
Published on

அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் மத்திய கிழக்கில் பல நாடுகளின் வான்வழி மூடப்பட்டு விமான சேவைகள் முற்றிலும் முடங்கின. இதனால் பலர் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் நேற்று மாலை முதல் துபாய், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

துபாயின் அபுதாபியில் இருந்து ஒரு விமானம் நேற்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

அதேபோல மற்றொரு விமானம் அபுதாபியில் இருந்து மும்பையில் தரையிறங்கியது.

விமானத்தில் தாயகம் திரும்பிய இந்தியர்கள் கூறுகையில், "வானத்தில் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்படுவதை எங்களால் பார்க்க முடிந்தது. வான்வெளி மிகவும் பரபரப்பாகவும் பதற்றமாகவும் இருந்தது" என்று தெரிவித்தனர்.

இன்று (மார்ச் 3) முதல் மஸ்கட் நகரிலிருந்து டெல்லி, கொச்சி, கோழிக்கோடு, மங்களூரு, மும்பை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கு மீண்டும் விமானங்களை இயக்கத் தொடங்குகிறது.

சவூதி அரேபியாவின் ஜெத்தாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று (மார்ச் 3) 10 சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

ஐக்கிய அரபு அமீர்காமத்திலும் நேற்று மாலை முதல் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.    

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com