சூரத் ஆடை தொழிற்சாலையில் தீவிபத்து - 2 தொழிலாளர்கள் பலி - 20 பேர் படுகாயம்

பற்றி எறிந்த திரியில் சம்பவ இடத்திலேயே 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.அவர்களில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
சூரத் ஆடை தொழிற்சாலையில் தீவிபத்து - 2 தொழிலாளர்கள் பலி - 20 பேர் படுகாயம்
Published on

குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.

இன்று மதியம், ஜோல்வா கிராமத்தில் உள்ள சந்தோஷ் டேஸ்டைல் மில் ஆலையில் ரசாயனங்கள் வைக்கப்பட்டிருந்த டிரம் வெடித்துச் சிதறியதால் தீவிபத்து ஏற்பட்டது.  2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர்.

தகவலறிந்து வரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து, காயமடைந்த 20 தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களுக்கு சூரத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com