இந்தியாவின் ஆகஸ்ட் மாத ஏற்றுமதி 6.7% அதிகரிப்பு: வர்த்தக பற்றாக்குறை எவ்வளவு தெரியுமா?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 32.89 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.கடந்த ஆகஸ்ட் மாதத்தின் ஏற்றுமதி 35.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் ஆகஸ்ட் மாத ஏற்றுமதி 6.7% அதிகரிப்பு: வர்த்தக பற்றாக்குறை எவ்வளவு தெரியுமா?
Published on

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும், கடந்த மாதம் 6.7 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளையில் இறக்குமதி 10 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 32.89 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் (கடந்த மாதம்) 35.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு 68.53 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இறக்குமதி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 61.59 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.

இருந்தபோதிலும், ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம் என்பதால், கடந்த ஆண்டு 26.49 பில்லியன் டாலராக இருந்த பற்றாக்குறை, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 35.64 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

2025 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை இந்தியாவின் ஏற்றுமதி 184.13 பில்லியன் டாலராகும். அதேவேளையில் இறக்குமதி 306.52 பில்லியன் டாலராகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com