வக்பு மசோதா நிறைவேற்றம் எதிரொலி- டெல்லி ஜமா மசூதி முன் துணை ராணுவப்படை குவிப்பு

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில் நடவடிக்கை.டெல்லி ஜமா மமூதி முன்பாக துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்ட கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
வக்பு மசோதா நிறைவேற்றம் எதிரொலி- டெல்லி ஜமா மசூதி முன் துணை ராணுவப்படை குவிப்பு
Published on

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்கும் , எதிராக 232 வாக்கும் பதிவாகின.

இதைதொடர்ந்து, மாநிலங்களவையிலும் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன்பிறகு, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பின்னர் நிறைவேற்றப்பட்டது.

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், டெல்லி ஜமா மமூதி முன்பாக துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்ட கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை ராணுவப் படை குவிக்கப்பட்டுள்ளது.

துணை ராணுவப்படையினர் லத்தி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com