பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக DRDO விருந்தினர் மாளிகை மேலாளர் கைது

பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் ஏவுகணைகள், ஆயுதங்களை டிஆர்டிஓ சோதனை செய்து வருகிறது.நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் ஜெய்சால்மர் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக DRDO விருந்தினர் மாளிகை மேலாளர் கைது
Published on

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) விருந்தினர் மாளிகையின் மேனஜர் மகேந்திர பிரசாத் என்பவரை சிஐடி போலீசார் கைது செய்தனர்.

ஜெய்சால்மரில் உள்ள பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை டிஆர்டிஓ சோதனை செய்து வருகிறது. இது தொடர்பான நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்திய ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய தகவல்களைப் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு அவர் கசியவிட்ட குற்றச்சாட்டில் மகேந்திர பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com