மிஸ் கிராண்ட் கேரளா 2026: பட்டம் வென்று அசத்திய பல் மருத்துவர் அஸ்வினி..!

பல் மருத்துவரான இவர், நடனம் மற்றும் ஆடை அலங்கார போட்டிகளில் பங்கேற்பு. 'மிஸ் கிராண்ட் இந்தியா' போட்டியில் பங்கேற்க உள்ளார்.
மிஸ் கிராண்ட் கேரளா 2026: பட்டம் வென்று அசத்திய பல் மருத்துவர் அஸ்வினி..!
Published on

கேரள மாநிலம் மூவாட்டுப்புழாவை சேர்ந்தவர் டாக்டர் கே.எஸ்.அஸ்வினி. பல் மருத்துவரான இவர், நடனம் மற்றும் ஆடை அலங்கார போட்டிகளில் பங்கேற்று வந்தார்.

தொடர்ந்து அழகி போட்டியில் பங்கேற்ற அஸ்வினி, தற்போது 'மிஸ் கிராண்ட் கேரளா 2026' பட்டம் வென்றுள்ளார்.

இதன் மூலம் அவர் அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெற உள்ள 'மிஸ் கிராண்ட் இந்தியா' போட்டியில் பங்கேற்க உள்ளார்.

இவரது தந்தை ஸ்ரீராஜ், தெற்கு ரெயில்வேயில் மின் பொறியாளராகவும், தாயார் பிந்துமேனன், கேரள நீர் ஆணையத்தில் கணக்கு அதிகாரியாகவும் பணியாற்றி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com