'தே.ஜ.கூட்டணிக்கு அதிகரிக்கும் ஆதரவால் தி.மு.க. அதிர்ச்சியில் உள்ளது' - பிரதமர் மோடி

நேற்று திருச்சியில் திமுக மாநாடு நடைபெற்றது. தமிழ்நாட்டின் கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இதில் பங்கேற்கின்றனர்
'தே.ஜ.கூட்டணிக்கு அதிகரிக்கும் ஆதரவால் தி.மு.க. அதிர்ச்சியில் உள்ளது' - பிரதமர் மோடி
Published on

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி பிரபலமடைவதால் திமுக அதிர்ச்சியில் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும் நாளை திருச்சியில் நடைபெற உள்ள அக்கூட்டணியின் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,

"நாளை, மார்ச் 11-ஆம் தேதி மாலை சுமார் 6:30 மணியளவில், திருச்சிராப்பள்ளியில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பொதுக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் என்.டி.ஏ தலைவர்களுடன் நான் பங்கேற்கிறேன். தமிழ்நாடு முழுவதும் என்.டி.ஏ-வின் அதிகரித்து வரும் செல்வாக்கைக் கண்டு தி.மு.க பதற்றமடைந்துள்ளது.

தி.மு.க-வின் மோசமான ஆட்சி மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை தமிழ்நாடு மக்கள் நினைவில் வைத்துக்கொண்டுதான் வருகிறார்கள். அதனால்தான், அவர்கள் என்.டி.ஏ-வின் நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்திற்கான திட்டங்களோடு தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.  

திருச்சியில் நாளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டின் கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கவுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com