Bulldozer-களால் வீடுகளை இடிப்பது மனிதாபிமானமற்றது.. உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி ஆணை

பொறுப்பே இல்லாமல் நடக்கும் ஆட்சியின் கீழ் இப்படி இடிக்கப்பட்டுள்ளன.புல்டோசர்கள் மூலம் இடித்து தள்ளப்பட்ட வீடுகளுக்கு 6 வாரங்களுக்குள் தலா ரூ10 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும்
Bulldozer-களால் வீடுகளை இடிப்பது மனிதாபிமானமற்றது.. உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி ஆணை
Published on

புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடித்து தள்ளும் உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசின் செயல், மனிதாபிமானமற்றது; சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு புல்டோசர்கள் கொண்டு மக்கள் வசிக்கும் வீடுகளை இடிப்பது குறித்து உச்சநீதிமன்றம் முந்தைய காலங்களிலும் கடும் கண்டனம் தெரிவித்தது. இருப்பினும் உ.பி. அரசின் இந்த செயல்பாடுகள் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் பிரயாக்ராஜ் நகரில் வீடுகள் மேம்பாட்டு வாரியத்தால் இடுத்துத் தள்ளப்பட்டது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உச்சல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள், பிரயாக்ராஜ் மேம்பாட்டுக் வாரியம் வீடுகளை புல்டோசர்கள் மூலம் இடித்து தள்ளுவது மனிதாபிமானமற்றது; சட்டவிரோதமானது. பொறுப்பே இல்லாமல் நடக்கும் ஆட்சியின் கீழ் இப்படி இடிக்கப்பட்டுள்ளன.

உ.பி.யில் சட்டத்தின் ஆட்சி என்ற பெயரில் பொதுமக்களின் வீடுகளை இப்படி இடித்து தள்ளுவது ஏற்க முடியாதது. இத்தகைய செயல்பாடுகள் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. புல்டோசர்கள் மூலம் இடித்து தள்ளப்பட்ட வீடுகளுக்கு 6 வாரங்களுக்குள் தலா ரூ10 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com