மக்களின் கடும் எதிர்ப்பால் வாகனங்களுக்கு விதித்த தடையை நீக்கிய டெல்லி அரசு

சுமார் 62 லட்சம் வாகனங்கள் ஒரே இரவில் மாயமாகும் என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியிருந்தது.தடையை விதிக்க ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசு ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் எவ்வளவு பணம் வாங்கியுள்ளது என கேட்டார்.
மக்களின் கடும் எதிர்ப்பால் வாகனங்களுக்கு விதித்த தடையை நீக்கிய டெல்லி அரசு
Published on

டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் விற்பனை செய்ய முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான மாநில அரசு ஜூலை 1 முதல் தடை விதித்தது.

இதனால் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தடையை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்து வந்தனர்.

இந்நிலையில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க மறுக்கும் சர்ச்சைக்குரிய உத்தரவை டெல்லி அரசு கைவிட்டுள்ளது.

பொதுமக்களின் கடும் எதிர்ப்பு மற்றும் கோபத்திற்குப் பிறகு, இந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

இந்த உத்தரவால் சுமார் 62 லட்சம் வாகனங்கள் ஒரே இரவில் மாயமாகும் என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியிருந்தது.

இந்த தடையை விதிக்க ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசு ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் எவ்வளவு பணம் வாங்கியுள்ளது என எதிர்கட்சித் தலைவர் அதிஷி கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.   

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com