விசாகப்பட்டினத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு

விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகப் பகுதிக்கு அருகே விபத்து நிகழ்ந்தது. எரிவாயு சிலிண்டர், வெல்டிங் பணியின்போது திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது.
விசாகப்பட்டினத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு
Published on

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகப் பகுதிக்கு அருகே உள்ள பழைய பொருட்கள் சேகரிப்பு கடையில் எரிவாயு சிலிண்டர், வெல்டிங் பணியின்போது திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினரும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த மாநகர காவல் ஆணையர் சங்கபத்ரா பாக்சி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com