

வங்கக் கடலில் உருவான புயல் மோன்தா தீவிர புயலாக மாறியது. இந்த புயல் இன்றிரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி இன்று 7.30 மணியளவில் மோன்தா புயல் மசூலிபட்டினம்- கலிங்கபட்டினம் இடையே கரையை கடக்க தொடங்கியது. தொடர்ந்து நள்ளிரவில் புயல் கரையை கடந்தது.
இந்த புயல் காரணமாக ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கோனசீமா பகுதியில் மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்பிக்கொண்டிருந்த பெண் பயணித்த ஆட்டோ மீது கனமழையால் மரம் முறிந்து விழுந்தது. இதில் அப்பெண் உயிரிழந்தார். மேலும் ஆட்டோ ஓட்டுனரும் 1 சிறுவனும் படுகாயமடைந்தனர்.
அல்லூரி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை மீட்புப்படையினர் மீட்டனர். ஸ்ரீகாகுளத்தில் சிவன் சிலை வெள்ளத்தில் பாதி மூழ்கிய நிலையில் இருந்த காட்சிகள் வெளியாகி உள்ளது.
பல இடங்களில் மரங்கள் பலத்த காற்றால் சாய்ந்தன. ஆபத்தான பகுதிகளில் இருந்து 76,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். 800 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டது. இதற்கிடையே இன்று ஆந்திராவில் 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
VIDEO | Cyclone Montha: Andhra Pradesh Police personnel clear fallen trees and restore traffic movement in Epurupalem, Vetapalem, and nearby areas after strong winds hit the region.(Full video available on PTI Videos – https://t.co/n147TvqRQz) pic.twitter.com/Ba0UotJzOW