இந்தியாவில் கலாசார மறுமலர்ச்சி நிகழ்கிறது.. ஆன்மீகப் பாரம்பரியம் புத்துயிர் பெறுகிறது என மோடி பெருமிதம்

சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயம் ஆகியவற்றையும் அவர் வெளியிட்டார்.ஆன்மீகம், தேசிய சேவை ஒரே நோக்கத்தில் இணக்கத்துடன் முன்னேறினால்தான், வளர்ந்த இந்தியாவிற்கான நமது இலக்கு நிறைவேறும்.
இந்தியாவில் கலாசார மறுமலர்ச்சி நிகழ்கிறது.. ஆன்மீகப் பாரம்பரியம் புத்துயிர் பெறுகிறது என மோடி பெருமிதம்
Published on

கோவாவில் குஷாவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண பார்டகலி ஜீவோத்தம் மடத்தின் 550வது ஆண்டு விழாவையொட்டி, 77 அடி உயர பிரமாண்ட ஸ்ரீ ராமர் வெண்கலச் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, மடம் உருவாக்கிய 'ராமாயண கருப்பொருள் பூங்காவையும் பிரதமர் திறந்து வைத்தார். மேலும், சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயம் ஆகியவற்றையும் அவர் வெளியிட்டார்.

சிலைத் திறப்புக்குப் பிறகு நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்தியா தற்போது ஒரு பிரம்மாண்டமான கலாசார மறுமலர்ச்சிக்கு சாட்சியாக உள்ளது. இன்றைய இந்தியா புதிய தீர்மானங்கள் மற்றும் புதிதாகக் கிடைத்த நம்பிக்கையுடன் தனது கலாசார அடையாளத்தை முன்னெடுத்துச் செல்கிறது.

அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படுவது, காசி விஸ்வநாதர் கோவில் மறுசீரமைக்கப்படுவது, மற்றும் உஜ்ஜயினியில் மகாகால்  கோவில் விரிவுபடுத்தப்படுவது ஆகியவை, தேசத்தின் ஆன்மீகப் பாரம்பரியம் புத்துயிர் பெறுவதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

நம் இளைஞர்களின் ஆற்றல், வளர்ந்து வரும் தன்னம்பிக்கை மற்றும் நமது கலாசார வேர்களுடனான புதுப்பிக்கப்பட்ட தொடர்பு அனைத்தும் இணைந்து ஒரு புதிய இந்தியாவை வடிவமைக்கின்றன.

ஆன்மீகம், தேசிய சேவை ஒரே நோக்கத்தில் இணக்கத்துடன் முன்னேறினால்தான், வளர்ந்த இந்தியாவிற்கான நமது இலக்கு நிறைவேறும். மேலும் மக்கள் நீர் பாதுகாப்பு மற்றும் சுதேசி பொருட்களை வாக்குகுதல் உள்ளிட்ட உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்" என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com