டெல்லி சட்டசபை தேர்தல்: வேலையில்லா பட்டதாரிக்கு வருடத்திற்கு ரூ.8,500 - காங்கிரஸ் வாக்குறுதி

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக தனித்தனியாக போட்டியிடுகின்றன. டெல்லியில் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தல்: வேலையில்லா பட்டதாரிக்கு வருடத்திற்கு ரூ.8,500 - காங்கிரஸ் வாக்குறுதி
Published on

டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் ஆட்சி அமைத்தால் ஜீவன் ரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், டெல்லியில் ஆட்சி அமைத்தால் 'யுவ உதான் யோஜனா' என்ற திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வருடத்திற்கு 8,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com