கேரள சட்டசபை தேர்தல்: பிரசார குழு, அறிக்கை குழுவை நியமித்தது காங்கிரஸ்

கேரளாவில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.அதற்கான ஆயத்த வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.
கேரள சட்டசபை தேர்தல்: பிரசார குழு, அறிக்கை குழுவை நியமித்தது காங்கிரஸ்
Published on

புதுடெல்லி:

சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை முதல் முறையாக பா.ஜ.க. கைப்பற்றி அசத்தியது.

45 ஆண்டாக இடதுசாரிகள் கட்டுப்பாட்டில் இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சி முதல் முறையாக பா.ஜ.க. வசமாகியது.

இதற்கிடையே, கேரளாவில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், கேரள சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரக் குழு மற்றும் அறிக்கைக் குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் பிரசாரக் குழுவிற்கு ரமேஷ் சென்னிதலா தலைவராகவும், சசி தரூர் இணைத் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் தேர்தல் அறிக்கை குழுவையும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com