ஆபரேஷன் சிந்தூர் குறித்து கருத்து- கைது நடவடிக்கையை எதிர்த்து அரியானா பேராசிரியர் வழக்கு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் சில கருத்துக்களை வெளியிட்டார்.கபில்சிபல் தாக்கல் செய்த மனுவை, சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து கருத்து- கைது நடவடிக்கையை எதிர்த்து அரியானா பேராசிரியர் வழக்கு
Published on

அரியானாவின் அசோகா பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருபவர் அலிகான் முகமது மக்முதா பாத்.

இவர் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் சில கருத்துக்களை வெளியிட்டார்.

அவரது கருத்து இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப் பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி போலீசார் அவரை டெல்லியில் நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில், கைது நடவடிக்கையை எதிர்த்து அரியானா பல்கலைக்ககழக பேராசிரியர் அலிகான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது சார்பில் கபில்சிபல் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. நாளை அல்லது புதன்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com