மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு கொலை மிரட்டல்

பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக சிராக் பஸ்வான் அறிவித்தார்.
மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு கொலை மிரட்டல்
Published on

பாட்னா:

பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.

கடந்த வாரம் சரண் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய மந்திரியும், லோக் ஜன்சக்தி (ராம் விலாஸ்) கட்சி தலைவருமான சிராக் பஸ்வான், 'வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போகிறேன். பீகாரின் வளர்ச்சிக்காக தேர்தலில் போட்டியிடுவேன்' என தெரிவித்தார்.

லோக் ஜனசக்தி கட்சி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் முக்கிய அங்கம் வகிக்கிறது என்பதால், சிராக் பஸ்வானின் இந்த அறிவிப்பு பீகாரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், சிராக் பஸ்வானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் பட் பாட்னா சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com