அ.தி.மு.க. கூட்டணியால் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் அதிகரிப்பு

டெல்லி மேல்சபையின் மொத்த எண்ணிக்கை 245. அதில் 9 இடங்கள் காலியாக இருக்கின்றன. கூட்டணிகள் பலத்துடன் அந்த எண்ணிக்கையை பா.ஜ.க. கைவசம் வைத்துள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியால் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் அதிகரிப்பு
Published on

சென்னை:

தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க, கூட்டணி அமைத்ததன் மூலம் பாராளுமன்ற மேல்சபையில் பா.ஜ.கவின் பலம் அதிகரித்துள்ளது.

டெல்லி மேல்சபையின் மொத்த எண்ணிக்கை 245. அதில் 9 இடங்கள் காலியாக இருக்கின்றன. இதனால் தற்போதைய எண்ணிக்கை 236-ஆக உள்ளது. இதில் பெரும்பான்மை பெற 119 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. கூட்டணிகள் பலத்துடன் அந்த எண்ணிக்கையை பா.ஜ.க. கைவசம் வைத்துள்ளது. தற்போது பா.ஜ.க. அணியில் அ.தி.மு.க. இணைந்துள்ளதால் அந்த கட்சியில் மேல்சபையில் உறுப்பினர்களாக இருக்கும் தம்பித்துரை, சந்திரசேகரன், சி.வி.சண்முகம், தர்மர் ஆகிய 4 எம்.பி.க்கள் ஆதரவு பா.ஜ.கவுக்கு கிடைத்து உள்ளது. இதன் மூலம் பா.ஜ.கவின் பலம் 123 ஆக உயர்ந்து உள்ளது. பா.ம.க.வை சேர்ந்த அன்பு மாரியின் பதவிக்காலம் வருகிற ஜூலையில் முடிகிறது. மீண்டும் அவர் மேல்சபை எம்.பி.யாக வந்தால் பா.ஜ.க. பலம் 124 ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ஆந்திரா, ஜம்மு-காஷ்மீரில் காலியாக இருக்கும் இடங்களுக்கான தேர்தல் முடியும் போது பா.ஜ.க. கூட்டணியின் பலம் 141 ஆக உயரலாம் என்று பா.ஜ.க. கணக்கு போட்டு உள்ளது. இதன் மூலம் மேல் சபையிலும் மசோதாக்களை நிறைவேற்ற போதுமான எண்ணிக்கையை பெற முடியும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com