உத்தவ் தாக்கரே கட்சி ஆதரவுடன் மேயர் பதவியை பிடித்த பாஜக: குதிரை பேரம் என காங்கிரஸ் குற்றச்சாட்டு

காங்கிரஸ் 27 இடங்களிலும், பாஜக 23 இடங்களிலும் வெற்றி பெற்றன.தேர்தலில் பாஜக 32 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.
உத்தவ் தாக்கரே கட்சி ஆதரவுடன் மேயர் பதவியை பிடித்த பாஜக: குதிரை பேரம் என காங்கிரஸ் குற்றச்சாட்டு
Published on

மகாராஷ்டிரா மாநிலத்தில் மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் மேயர் தேர்தல் நடைபெற்று வருகிறது.

சந்த்ரபூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா கட்சி கவுன்சிலர்கள் வாக்களித்ததால், பாஜக மேயர் வேட்பாளர் வெற்றி பெற்றார். உத்தவ் தாக்கரே கட்சி கவுன்சிலர்கள் மாற்றி வாக்களித்ததால் குதிரை பேரம் நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

சந்த்ரபூர் மேயர் தேர்தலில் பாஜக 32 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. காங்கிரஸ் 31 இடங்களில் வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தது. சிவ சேனா (UBT) 6 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இது காங்கிரஸ் கூட்டணியில் இடம் பிடித்திருந்தது. ஆனால் தேர்தலில் சிவ சேனா (UBT) கவுன்சிலர்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர்.

63 இடங்களை கொண்ட தேர்தலில் காங்கிரஸ் கட்சி 27 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. பாஜக 23 இடங்களை பிடித்திருந்தது. சிவ சேனா (UBT) 6 இடங்களையும், பாரதிய ஷேட்கரி கம்கார் பாக்ஷ் (ஜனவிகாஸ் சேனா) 3 இடங்களையும், விபிஏ 2 இடங்களையும், ஏஐஎம்ஐஎம், பிஎஸ்பி, சிவ சேனா ஆகியவை தலா ஒரு இடங்களையும் பெற்றிருந்தது. சுயேட்சை வேட்பாளர்கள் இரண்டு இடத்தில் வெற்றி பெற்றிருந்தன.

விபிஏ கவுன்சிலர்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். விபிஏ கவுன்சிலர் இருவர் காங்கிரஸ்க்கு வாக்களித்திருந்தால் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பார். காங்கிரஸ் கட்சியுடன் விபிஏ கூட்டணி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் குதிரை பேரம் நடைபெற்றது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com