ராதிகா பட போஸ்டரை வைத்து பாஜக - காங்கிரஸ் மோதல்: நிர்மலா சீதாராமன் vs சோனியா காந்தி - யார் OG தாய் கிழவி?

ராதிகா 75 வயது மூதாட்டியாக 'பவுனுத்தாயி' என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லூட்டஸ் புரொடக்ஷன்ஸ்" (Lootus Productions), ஓடுங்க அது நம்மள நோக்கிதான் வருகின்றது போன்ற கிண்டலான வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.
ராதிகா பட போஸ்டரை வைத்து பாஜக - காங்கிரஸ் மோதல்: நிர்மலா சீதாராமன் vs சோனியா காந்தி - யார் OG தாய் கிழவி?
Published on

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஸன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகை ராதிகா நடித்துள்ளப் படம் தாய் கிழவி.

இப்படத்தில் ராதிகா 75 வயது மூதாட்டியாக 'பவுனுத்தாயி' என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராதிகாவுடன் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு மற்றும் ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் இப்படத்தில் 'தாய் கிழவி வாரா' என்ற பாடலைப் பாடியுள்ளார்.

இப்படம் பிப்.27ஆம் தேதி வெளியாக உள்ளது. கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இப்படத்தைப் பார்த்து ராதிகாவின் நடிப்பைப் பாராட்டியுள்ளனர். இப்படத்தில் ராதிகாவின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டிருக்கும். அப்போஸ்டரை ரீகிரியேட் செய்து தமிழ்நாடு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளன. இது தற்போது இணையத்தில் பெரும் கவனம் ஈர்த்து வருகிறது.  

தேர்தல் நேரங்களில் கட்சிகள், எதிர்க்கட்சிகளை விமர்சிக்க சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தாய் கிழவி ராதிகாபோல சித்தரித்து, இயக்கம் ஆர்.எஸ்.எஸ். எனக் குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. லூட்டஸ் புரொடக்ஷன்ஸ்" (Lootus Productions), ஓடுங்க அது நம்மள நோக்கிதான் வருகின்றது போன்ற கிண்டலான வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.

இதற்குப் பதிலடியாக, பாஜக தரப்பில் சோனியா காந்தியை சித்தரித்து மற்றொரு போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் அவர் கையில் துடைப்பம் வைத்திருப்பது போன்றும், 2ஜி ஊழல், போஃபர்ஸ் போன்ற விவகாரங்களைக் குறிப்பிட்டுக் கிண்டல் செய்யும் வாசகங்களும் இடம்பெற்றன. பாஜக தலைவர் எஸ்.ஜி. சூர்யா, சோனியா காந்தியை "அசல் தாய் கிழவி" (Original Thai Kelavi) என்று விமர்சித்துப் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த போஸ்டர்கள் இணையத்தில் பெரும் கவனம் ஈர்த்து வருகின்றன. இதில் யார் OG என பலரும் கமெண்ட் செய்துவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com