தமிழில் முருகன் பாடலை பாடி அசத்திய பீகார் இளம் எம்.எல்.ஏ மைதிலி தாகூர்

25 வயதே ஆன இவர் பீகாரின் இளம் எம்எல்ஏவாக உருவெடுத்தார்.ரியாலிட்டி ஷோ மூலம் சிறு வயதிலேயே மக்கள் மத்தியில் பரிச்சயமாகி ஊடக வெளிச்சத்திலேயே இருந்து வந்தார்.
தமிழில் முருகன் பாடலை பாடி அசத்திய பீகார் இளம் எம்.எல்.ஏ மைதிலி தாகூர்
Published on

பீகாரில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட பிரபல போஜ்புரி நாட்டுப்புற பாடகர் மைதிலி தாக்கூர் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் 25 வயதே ஆன இவர் பீகாரின் இளம் எம்எல்ஏவாக உருவெடுத்தார்.

மைதிலி தாக்கூர், சிறுவர்களுக்கான பாட்டும் பாடும் ரியாலிட்டி ஷோ மூலம் சிறு வயதிலேயே மக்கள் மத்தியில் பரிச்சயமாகி ஊடக வெளிச்சத்திலேயே இருந்து வந்தார்.

குறிப்பாக, மைதிலி தாகூர் தமிழின் மீது கொண்டுள்ள ஆர்வம் உண்மையிலேயே வியக்கத்தக்கது. "முத்தையருள் பத்தித் திருநகை..." என்ற அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது.

இந்நிலையில், கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பீகார் இளம் எம்.எல்.ஏ மைதிலி தாக்கூர் முருகன் பாடலை தமிழில் பாடி அசத்தியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தமிழின் கடினமான சந்தப் பாடல்களை இவ்வளவு துல்லியமான உச்சரிப்புடன் பாடுவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com