பீகார் முதற்கட்ட தேர்தல்: மனு தாக்கல் நிறைவு

வேட்புமனு தாக்கல் காலை முதல் வேகம் எடுத்தது. தேர்தல் பிரசாரமும் சூடு பிடித்துள்ளது.முன்னாள் மத்திய அமைச்சர் ராம் கிருபால் யாதவ், தானாபூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பீகார் முதற்கட்ட தேர்தல்: மனு தாக்கல் நிறைவு
Published on

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

முதற்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை முடிவடைந்தது. இன்று கடைசி நாள் என்பதால், வேட்புமனு தாக்கல் காலை முதல் வேகம் எடுத்தது. தேர்தல் பிரசாரமும் சூடு பிடித்துள்ளது.

பா.ஜ.க. மூத்த தலைவரும் துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி முங்கேர் மாவட்டம் தாராபூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லால் பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், ஜனசக்தி ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். அவர் வைசாலி மாவட்டம் மகுவா தொகுதியில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதுபோல் முன்னாள் மத்திய அமைச்சர் ராம் கிருபால் யாதவ், தானாபூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இங்கு உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று பிரசாரம் செய்தார். ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் முதலமைச்சருமான நிதிஷ் குமார் தனது தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com