திருப்பதி கோவில் அருகே விதிமீறி கேக் வெட்டிய பிக் பாஸ் நடிகைகள்- தேவஸ்தான அதிகாரிகள் விசாரணை

திருப்பதி மலைக்கு கேக் கொண்டு செல்வதும் கேக் வெட்டுவதும் தேவஸ்தான விதிகளுக்கு எதிரானது.தேவஸ்தான அதிகாரிகள் கேக் வெட்டிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி கோவில் அருகே விதிமீறி கேக் வெட்டிய பிக் பாஸ் நடிகைகள்- தேவஸ்தான அதிகாரிகள் விசாரணை
Published on

ஆந்திர பிரபல பிக்பாஸ் நடிகைகள் தனுஜா, மாதுரிஆகியோர் திருப்பதி மலைக்கு வந்தனர்.

திருப்பதி மலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கிய இவர்கள் தனுஜாவின் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடினார். பிறந்த நாள் கொண்டாட்டத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பதி மலைக்கு கேக் கொண்டு செல்வதும் கேக் வெட்டுவதும் தேவஸ்தான விதிகளுக்கு எதிரானது.

எனவே தேவஸ்தான அதிகாரிகள் கேக் வெட்டிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாதுரி மற்றும் தனுஜா கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏழுமலையான் கோவில் முன்பாக திருப்பதி தேவஸ்தான விதிகளை மீறி போட்டோ ஷூட் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com