பாரத் பந்த்: இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் - வங்கிகள், பேருந்துகள் வழக்கம் போல் இயங்குமா?

இந்த பாரத் பந்த் போராட்டத்தில் சுமார் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் இந்திய விவசயிகளை பாதிக்கும் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து மத்திய அரசு விலக வேண்டும்.
பாரத் பந்த்: இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் - வங்கிகள், பேருந்துகள் வழக்கம் போல் இயங்குமா?
Published on

மத்திய அரசின் விவசாயம், தொழிலாளர் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து இன்று (வியாழக்கிழமை) நாடு தழுவிய 'பாரத் பந்த்' வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

INTUC, AITUC, HMS, CITU உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு சையுக்த கிசான் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த பாரத் பந்த் போராட்டத்தில் சுமார் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்றும், நாடு முழுவதும் 600 மாவட்டங்களில் இதன் தாக்கம் இருக்கும் என்றும் AITUC பொதுச் செயலாளர் அமர்ஜீத் கவுர் தெரிவித்துள்ளார். 

கோரிக்கைகள்:

29 பழைய தொழிலாளர் சட்டங்களை நீக்கிவிட்டு நவம்பர் 2025-இல் அறிவிக்கப்பட்ட நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், அணுசக்தி துறையை தனியாருக்கு திறந்து விடும் SHANTI சட்டம், மின்சாரத் திருத்த சட்டம் (Electricity Amendment Bill), விவசாயிகளை பாதிக்கும் வரைவு விதை மசோதா (Draft Seed Bill) ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும். 

வி.பி.ஜி ராம் ஜி சட்டத்தை ரத்து செய்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் பழையபடி அமல்படுத்த வேண்டும்.

அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் மற்றும் விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும், விக்சித் பாரத் - கிராமின் மிஷன் 2025 சட்டத்தை ரத்து செய்து, இளைஞர்களுக்கு முறையான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

சேவைகள் பாதிப்பு:

வேலைநிறுத்தம் மற்றும் போராட்டத்தால் இன்று, போக்குவரத்து மற்றும் அரசுத் துறை சேவைகளில் பாதிப்பு ஏற்படும். மேலும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) உள்ளிட்ட வங்கி அமைப்புகள் இதில் பங்கேற்பதால், பொதுத்துறை வங்கிகளின் சேவையில் பாதிப்பு ஏற்படக்கூடும்.

ஆனால் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது. ஊழியர்கள் வராததால் சில சேவைகள் பாதிக்கும். மேலும் வழக்கம்போல இயங்கும் பேருந்துகள், பள்ளிகள், பிற சேவைகளில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com