உலகின் சிறந்த சிக்கன் உணவுகள்: இந்தியர்கள் அதிகம் விரும்பும் பட்டர் சிக்கனுக்கு 5-வது இடம்

வெண்ணெய் கலந்த, கிரீமி கிரேவியில் போடப்படும் தந்தூரி கோழியின் துண்டுகள் தான் பட்டர் சிக்கனில் மாயாஜாலத்தை உருவாக்குகின்றன.பூண்டு அல்லது வெண்ணெய் என எதுவாக இருந்தாலும், பட்டர் சிக்கனை நானுடன் சேர்த்து சாப்பிடவே பெரும்பாலோர் விரும்புகிறோம்.
உலகின் சிறந்த சிக்கன் உணவுகள்: இந்தியர்கள் அதிகம் விரும்பும் பட்டர் சிக்கனுக்கு 5-வது இடம்
Published on

வட இந்தியாவின் புகழ்பெற்ற உணவான பட்டர் சிக்கன், டேஸ்ட்அட்லஸ் நிறுவனம் வெளியிட்ட தரவரிசையில் 5-வது இடத்தை பெற்றுள்ளது.

'உலகின் 20 சிறந்த சிக்கன் உணவுகள்' என்ற தலைப்பிலான பட்டியலில் துருக்கியின் பிலிக் டோப்காபி முதலிடத்திலும், மொராக்கோவைச் சேர்ந்த ரிஃபிசா மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த சிக்கின் மற்றும் கொரிய வறுத்த சிக்கன் ஆகியவை 2-வது இடத்திலும் உள்ளன. முதல் 20 இடங்களில் உள்ள மற்றொரு இந்திய உணவு தந்தூரி சிக்கன். இது 14-வது இடத்தில் உள்ளது.

வெண்ணெய் கலந்த, கிரீமி கிரேவியில் போடப்படும் தந்தூரி கோழியின் துண்டுகள் தான் பட்டர் சிக்கனில் மாயாஜாலத்தை உருவாக்குகின்றன.

ஒரு நாள் தந்தூரி சிக்கனை வீணாக்குவதைத் தவிர்க்கும் முயற்சியில் இந்த உணவு உருவாக்கப்பட்டது. ஆனால் அது இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாக தற்போது மாறி உள்ளது.

பிரிவினைக்கு முந்தைய காலத்தில் பெஷாவரில் உள்ள மோதி மஹால் உணவகத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது என்பது பொதுவான கதை. உணவகத்தில் பணிபுரிந்த குந்தன் லால் குஜ்ரால் மற்றும் குந்தன் லால் ஜக்கி ஆகியோர் 1947 பிரிவினைக்குப் பிறகு இந்தியாவுக்கு குடிபெயர்ந்து, தாக்கூர் தாஸ் மாகோ என்ற தொழிலதிபருடன் சேர்ந்து மோதி மஹாலைத் திறந்தனர். இரண்டு குடும்பங்களும் பட்டர் சிக்கனை உருவாக்கியதாக உரிமை கோருகின்றன.

பூண்டு அல்லது வெண்ணெய் என எதுவாக இருந்தாலும், பட்டர் சிக்கனை நானுடன் சேர்த்து சாப்பிடவே பெரும்பாலோர் விரும்புகிறோம்.

டாப் உணவுகள் பட்டியலில் சிக்கன் பிரியாணி இடம் பெறாதது வருத்தம் என்று சமூக வலைத்தளத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் இந்தியாவில் பலரது விருப்ப உணவாக சிக்கன் பிரியாணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com