ஈரான் உச்ச தலைவர் படுகொலையை மோடி அரசு கண்டிக்காமல் இருப்பது... சோனியா காந்தி கண்டனம்!

ஒரு நாட்டின் தலைவரைப் படுகொலை செய்வது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது.ஐநா சபையில் இந்தியாவுக்கு ஆதரவாக ஈரான் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.
ஈரான் உச்ச தலைவர் படுகொலையை மோடி அரசு கண்டிக்காமல் இருப்பது... சோனியா காந்தி கண்டனம்!
Published on

அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி படுகொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளுக்கு அவர் எழுதியுள்ள தலையங்கத்தில், "ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி படுகொலை செய்யப்பட்டதை மோடி அரசு கண்டிக்காமல் இருப்பது, தனது தார்மீகப் பொறுப்பிலிருந்து விலகும் செயல்.

பேச்சுவார்த்தையின் போதே ஒரு நாட்டின் தலைவரைப் படுகொலை செய்வது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது. "வசுதைவ குடும்பகம்" என்று பேசும் இந்தியா, இது போன்ற இக்கட்டான காலங்களில் மௌனம் காப்பது அதன் சர்வதேச நம்பகத்தன்மையைக் கடுமையாக குறைக்கும்.

1994-ல் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச மயமாக்கும் முயற்சிகள் நடந்தபோது, ஐநா சபையில் இந்தியாவுக்கு ஆதரவாக ஈரான் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஈரானுடன் பேணி வந்த ஆழமான ராஜதந்திர உறவுகளை பாஜக அரசு கைவிட்டுவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com