Iran War | போர் பதற்றத்திற்கு மத்தியில் கத்தாரில் இருந்து பத்திரமாக நாடு திரும்பிய 1000 இந்தியர்கள்

தூதரகத்தின் 24/7 கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டில் உள்ளது.பயண வசதிகளை இந்திய தூதரகம் ஏற்பாடு செய்தது.
Iran War | போர் பதற்றத்திற்கு மத்தியில் கத்தாரில் இருந்து பத்திரமாக நாடு திரும்பிய 1000 இந்தியர்கள்
Published on

மேற்கு ஆசியாவில் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், சுமார் 1000 இந்திய பயணிகள் கத்தாரில் இருந்து டெல்லி, மும்பை மற்றும் கொச்சிக்கு பத்திரமாக திரும்பியதாக கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், சல்வா எல்லை வழியாக சவுதி அரேபியாவிற்கு இந்திய நாட்டினர் பயணம் செய்ய 96 மணிநேரத்திற்கு மட்டும் செல்லுபடியாகும் தற்காலிக பயண விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தூதரகத்தின் 24/7 கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

"மார்ச் 10-ஆம் தேதி கத்தார் ஏர்வேஸ் விமானங்களில் சுமார் 1000 இந்திய பயணிகள் டெல்லி, மும்பை மற்றும் கொச்சிக்கு பயணம் செய்தனர். சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் பயண வசதி மற்றும் அவசரகால தேவைக்காக இந்திய தூதரகம் கத்தார் ஏர்வேஸ் உடன் ஒருங்கிணைந்தது. மனிதாபிமான அடிப்படையில் முன்னுரிமை வழங்கிய கத்தார் ஏர்வேஸ்-க்கு நன்றி.

இன்று (மார்ச் 11) கத்தார் ஏர்வேஸின் ஒரு விமானம் டெல்லிக்கு புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது; 96 மணிநேர செல்லுபடியாகும் தற்காலிக பயண விசாக்களில் சல்வா எல்லை வழியாக சவுதி அரேபியாவிற்கு இந்திய குடிமக்களின் பயண வசதிகளை இந்திய தூதரகம் ஏற்பாடு செய்தது.

கத்தாரில் சிக்கித் தவித்த இந்திய கூடைப்பந்து அணி சவுதி அரேபியாவில் இருந்து விமானங்களில் பயணம் செய்த பிறகு இந்தியாவை அடைந்தது. ஒத்துழைப்பு வழங்கிய சவுதி அரேபியா மற்றும் கத்தாருக்கு நன்றி," என்று கத்தாரில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com