சுகோய் 30 ரக போர் விமானம் மாயம்: விமானப்படை அதிர்ச்சி

அசாமின் ஜோர்ஹட்டில் இருந்து சுகோய்-30 ரக போர் விமானம் புறப்பட்டது. சுமார் 7.42 மணிக்கு ரேடாரில் இருந்து மறைந்ததாக தகவல் வெளியானது.
சுகோய் 30 ரக போர் விமானம் மாயம்: விமானப்படை அதிர்ச்சி
Published on

கவுகாத்தி:

இந்திய விமானப் படையின் சுகோய்-30 ரக போர் விமானம் காணாமல் போனதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட்டில் இருந்து புறப்பட்ட சுகோய்-30 ரக போர் விமானம் சுமார் 7.42 மணிக்கு திடீரென ரேடாரில் இருந்து மறைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

விமானம் காணாமல் போனது குறித்து விமானப்படை குழு ஆய்வு செய்து வருகிறது என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com