டெல்லி கார் வெடிப்பில் காயமடைந்தோரை நேரில் சென்று சந்தித்த அமித் ஷா

24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.முக்கிய நகரங்களில் ரெயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் தீவிர சோதனையில் நடத்தப்பட்டு வருகிறது.
டெல்லி கார் வெடிப்பில் காயமடைந்தோரை நேரில் சென்று சந்தித்த அமித் ஷா
Published on

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.

அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் சம்பவம் குறித்து பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் அமித் ஷா, விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் லோக் நாயக் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அடுத்ததாக விபத்து நடந்த இடத்தை அடுத்ததாகப் பார்வையிடவுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பாக காவல் துறை ஆணையர் சதீஷ் கோல்சாவிடம் அமித் ஷா கேட்டறிந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து டெல்லியில் முக்கிய இடங்களில் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் முக்கிய நகரங்களில் ரெயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் தீவிர சோதனையில் நடத்தப்பட்டு வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com