இந்தியாவில் இருந்து நக்சலிசம் முற்றிலும் அகற்றப்படும்: அமித் ஷா உறுதி

சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் 60-வது டிஜிபிக்கள் மற்றும் ஐஜிக்கள் மாநாடு நடைபெற்றது.இந்த மாநாடு நேற்று தொடங்கி வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தியாவில் இருந்து நக்சலிசம் முற்றிலும் அகற்றப்படும்: அமித் ஷா உறுதி
Published on

ராய்ப்பூர்:

சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் 60-வது டிஜிபிக்கள் மற்றும் ஐஜிக்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு நேற்று தொடங்கி வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:

அடுத்த டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்கள் மாநாட்டிற்கு முன் இந்தியா நக்சலிசத்திலிருந்து முற்றிலும் விடுபடும்.

நக்சலிசத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்காக பா.ஜ.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நக்சலிசத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 2014ல் 126ஆக இருந்தது. இன்று அது வெறும் 11 ஆக குறைந்துள்ளது.

உளவுத்துறை செயல்பாட்டால் பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு மூளையாக இருப்பவர்களையும் சிறையில் அடைக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com