அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு: ஏர் இந்தியா அறிக்கை

விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்தனர். இந்த விபத்தில் குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார்.
அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு: ஏர் இந்தியா அறிக்கை
Published on

அகமதாபாத்:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு நேற்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது.

விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்தனர். இதில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள். 6 பேர் போர்ச்சுகலை சேர்ந்தவர்கள். ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 14 குழந்தைகள் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார்

இந்த விபத்தில் 130 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகமதாபாத் விமான விபத்தில் பயணம் செய்த 241 பேரும் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com