டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சி மாநாடு பிப்.21 வரை நீட்டிப்பு

ஏஐ உச்சி மாநாட்டின் அட்டவணை தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.உலகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் பொதுமக்களுக்கு நாளை அனுமதி இல்லை.
டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சி மாநாடு பிப்.21 வரை நீட்டிப்பு
Published on

டெல்லியின் பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 5 நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த மாநாடு வரும் 20-ந்தேதி முடிவடைகிறது.

70,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மாநாட்டு திடலில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் உலக நாடுகளின் ஏஐ கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் ஏஐ தாக்க உச்சி மாநாடு பிப்.21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிப்.20-ந்தேதியுடன் நிறைவடைய இருந்த ஏஐ உச்சி மாநாட்டின் அட்டவணை தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ஏஐ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, பிற உலகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் பொதுமக்களுக்கு நாளை அனுமதி இல்லை. பிப்.20, 21 ஆகிய நாட்கள் ஏஐ உச்சி மாநாட்டிற்கு பொதுமக்கள் தாராளமாக செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com