AI தொழில்நுட்பத்தால் இந்திய IT நிறுவனங்களுக்கு விழுந்த அடி! - நிஃப்டி IT பங்குகள் பெரும் சரிவு

AI தொழில்நுட்பத்தின் தாக்கத்தால்இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி NIFTY IT பங்குகள் இதுவரை இல்லாத அளவிற்கு 5% அளவுக்கு சரிவை சந்தித்துள்ளன.
AI தொழில்நுட்பத்தால் இந்திய IT நிறுவனங்களுக்கு விழுந்த அடி! - நிஃப்டி IT பங்குகள் பெரும் சரிவு
Published on

செயற்கை நுண்ணறிவான ஏஐ தொழில்நுட்பம் இந்த ஆண்டு அசுர வளர்ச்சி கண்டது. கூகுள் ஜெமினி, ஓபன் ஏஐ சாடஜிபிடி, மெட்டா ஏஐ, பெரிப்ளெக்ஸிட்டி ஏஐ, டீப்சீக் என ரக ரகமாக வெகு ஏஐ மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

குறிப்பாக நிறுவனங்கள் தங்கள் பணிகளை எளிதாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கின.

இதனால் மனிதர்கள் செய்து வந்த பல தொழில்நுட்ப வேலைகளுக்கு ஏஐ ஆப்பு வைத்தது. நடப்பாண்டில் உலகின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. இதனால் பலர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், AI தொழில்நுட்பத்தின் தாக்கத்தால், Wipro, TCS, Infosys, L&T போன்ற இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன. NIFTY IT பங்குகள் இதுவரை இல்லாத அளவிற்கு 5% அளவுக்கு சரிவை சந்தித்துள்ளன.

'ஆந்த்ரோபிக்' நிறுவனத்தின் புதிய கிளாவுட் AI-ன் அறிமுகத்தால், IT நிறுவனங்கள் கதிகலங்கிப் போயுள்ளன. இந்நிறுவனங்களின் Outsourcing சேவைகளை இந்த Al Chatbot-கள் மிகத் துல்லியமாகச் செய்து முடித்து, அதை நேரத்திற்குத் தகுந்தவாறு மேம்படுத்திக் கொள்வதால் மனிதர்கள் தலையீடு தேவையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com