கும்பமேளா குறித்து தவறான தகவல் பரப்பிய 53 சமூக ஊடக கணக்குகள் முடக்கம்

பிரயாக்ராஜில் மகா கும்பமேளா விழா கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர்.
கும்பமேளா குறித்து தவறான தகவல் பரப்பிய 53 சமூக ஊடக கணக்குகள் முடக்கம்
Published on

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா விழா கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர்.

இந்தநிலையில், மகா கும்பமேளா குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக 53 சமூக ஊடக கணக்குகளை முடக்கி போலீசார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். கும்பமேளாவில் கூட்ட நெரிசல், தீ விபத்து என பழைய வீடியோக்களை வெளியிட்டு தவறான தகவலை பரப்பி பதற்றம் ஏற்படுத்திய பல சமூக ஊடக கணக்குகள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com