ஒடிசா அருகே தடம்புரண்ட சென்னை ரெயில்: பயணிகள் அதிர்ச்சி

ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாகபுரா என்ற இடத்தில் ரெயில் தடம் புரண்டது.இதில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒடிசா அருகே தடம்புரண்ட சென்னை ரெயில்: பயணிகள் அதிர்ச்சி
Published on

புவனேஷ்வர்:

சென்னையில் இருந்து மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி செல்லும் ஜல்பைகுரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவில் இன்று காலை 8.51 மணிக்கு தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் ஒரு ஏசி பெட்டி, 2 பொது பெட்டி என மொத்தம் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்றன.

ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாகபுரா என்ற இடத்தில் ரெயில் தடம்புரண்டது. இதில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவலறிந்து அங்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் ரெயில் பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரங்களுக்கும் பிறகு அப்பகுதியில் ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.

திடீரென ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com