மைசூருவில் இருந்து புத்தூருக்கு கஞ்சா கடத்திய 3 பேர் கைது

காரில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் வெளியே விழுந்து கிடந்தது.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மைசூருவில் இருந்து புத்தூருக்கு கஞ்சா கடத்திய 3 பேர் கைது
Published on

மங்களூரு:

மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணாவில் இருந்து குடகு மாவட்டம் மடிகேரி வழியாக தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூருக்கு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த கார் மடிகேரியை தாண்டி சுள்ளியா அருகே தேவரகொல்லி பகுதியில் வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில் இருந்த 3 பேரும் லேசான காயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டனர். அப்போது காரில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் வெளியே விழுந்து கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மக்கள், மடிகேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் புத்தூரை சேர்ந்த பஸ்ருதீன், முஸ்தாக், ஜாபீர் என்பதும், அவர்கள் பிரியப்பட்டணாவில் இருந்து புத்தூருக்கு கஞ்சா கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா, கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து மடிகேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com