2,000 ரூபாய் நோட்டுகள் 98.2 சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டன: ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகள் குறித்த விவரங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. தற்போது ரூ.6,691 கோடி மதிப்பிலான நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை என கூறப்பட்டுள்ளது.
2,000 ரூபாய் நோட்டுகள் 98.2 சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டன: ரிசர்வ் வங்கி
Published on

மும்பை:

நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த நோட்டுகளை பொதுமக்கள் தங்கள் வங்கிக்கணக்கில் செலுத்தவோ, வங்கிகளில் மாற்றவோ செய்யலாம் என அறிவித்தது. இதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

அதன்பின் ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மூலம் மாற்றிக்கொள்ளவும் பல்வேறு கட்ட அறிவிப்புகளை வழங்கியது.

இதற்கிடையே, வங்கிக்கு திரும்பிய 2,000 ரூபாய் நோட்டுகள் குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 31-ம் தேதி வரை வங்கிக்கு திரும்பிய 2,000 ரூபாய் நோட்டு விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி, சுமார் 98.2 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி உள்ளன. தற்போது ரூ.6,691 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் வங்கிகளுக்கு வரவில்லை என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com