ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து- 2 வீரர்கள் உயிரிழப்பு

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மலையில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது.விபத்து நடந்த இடத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து- 2 வீரர்கள் உயிரிழப்பு
Published on

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபூர் மாவட்டத்தில் இன்று கட்டுப்பாட்டை இழந்த ராணுவ வாகனம் ஒன்று மலையில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

பந்திபூர் மாவட்டத்தில் உள்ள சதர் கூட் பேயன் என்ற பகுதி அருகே சாலையின் ஒரு கூர்மையான வளைவில் திரும்ப முயன்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மலையில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த ராணுவ வீர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இரண்டு வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 5 ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்த இடத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யூனியன் பிரதேசத்தில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளாவது முதல் முறை அல்ல.

கடந்த ஆண்டு டிசம்பர் 24 அன்று, பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் 350 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஐந்து வீரர்கள் இறந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் பயங்கரவாத கோணம் எதுவும் இல்லை என ராணுவம் தெரிவித்துள்ளது.

இதேபோல், நவம்பர் 4 அன்று, ரஜோரி மாவட்டத்தில் வாகனம் சாலையை விட்டு விலகி ஒரு பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஒரு ராணுவ வீரர் இறந்தார் மற்றும் மற்றொருவர் காயமடைந்தார்.

நவம்பர் 2, அன்று ரியாசி மாவட்டத்தில் ஒரு மலைப்பாங்கான சாலையில் இருந்து கார் சறுக்கி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஒரு பெண் மற்றும் அவரது 10 மாத மகன் உட்பட மூன்று பேர் இறந்தனர் மற்றும் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com