சத்தீஸ்கர் மாநிலத்தில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

இன்று காலை முதல் நடைபெற்ற சண்டையில் நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.கடந்த 12-ந்தேதி 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், இன்று 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
Published on

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இன்று காலை 9 மணிக்கு இந்த சண்டை தொடங்கியது. இன்று மாலை வரை தொடர்ந்து சண்டையில் நக்சலைட்டை சேர்ந்த 12 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

மூன்று மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ரிசர்வ் படை, சிஆர்பிஎஃப்-ன் ஐந்து பட்டாலியன்கள், கோப்ரா, சிஆர்பிஎஃப்-ன் 229-வது பட்டாலியன் ஆகியவற்றை சேர்ந்த வீரர்கள் இணைந்து நக்சலைட்டுகள் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த மாதத்தில் பிஜப்பூரில் நடைபெற்ற 2-வது என்கவுண்டர் இதுவாகும். கடந்த 12-ந்தேதி நடைபெற்ற சண்டையில் ஐந்து நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதில் இரண்டு பேர் பெண்கள் ஆவார்கள்.

கடந்த 6-ந்தேதி நக்சலைட்டுகள் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 9 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து நக்சலைட்டுகளை தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com