ஒடுகத்தூர் அருகே காட்டு தீ பரவி ரூ. 12 லட்சம் மதிப்பிலான கோழி பண்ணை எரிந்து சாம்பலானது

மர்ம நபர் காட்டிற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.
ஒடுகத்தூர் அருகே காட்டு தீ பரவி ரூ. 12 லட்சம் மதிப்பிலான கோழி பண்ணை எரிந்து சாம்பலானது
Published on

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த மராட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரேவதி (வயது 55), இவருக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ஒரு பகுதியில் மாட்டு தீவனமும், அதன் அருகிலேயே 250 அடி நீளத்தில் தகரத்தால் ஆனா கோழி பண்ணை ஒன்றும் அமைத்துள்ளார்.

தற்போது இந்த பண்ணையில் கோழிகளை வளர்ப்பதற்காக முழு வேலைபாடுகளும் நடந்து வந்தது. கோழிகளை வளர்ப்பதற்காக ரூ.12 லட்சம் மதிப்பில் அனைத்து உபகரண பொருட்களும் வாங்கி வந்து பண்ணையில் பொருத்தப்பட்டு வந்தது. இந்த பண்ணை அருகிலேயே பரவமழை காப்புக்காடு உள்ளது. அந்த பகுதியில் மர்ம நபர் காட்டிற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.

அப்போது காடு பற்றி எரிந்தது. இந்த நிலையில் அங்கிருந்து தீப்பொறி பறந்து வந்து கோழிப் பண்ணை மீது விழுந்துள்ளது. இதில் தீ மளமளவென பண்ணை முழுவதும் பரவி அருகே உள்ள மாட்டு தீவன பயிர்களுக்கும் பரவியது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த ஒடுகத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பாஸ்கரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 2 மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்த போதிலும் கோழி பண்ணை முழுவதும் தீ பிடித்து எரிந்ததில் சுமார் ரூ.12 லட்சம் பொருட்கள் சாம்பலானது.

இதுகுறித்து, தகவலறிந்த வருவாய் துறையினர் மற்றும் வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோழி பண்ணை பற்றி சாம்பலான நிலையில் இதற்கு அரசு முறையில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com