மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை- இன்றைய நிலவரம்

நேற்று ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை- இன்றைய நிலவரம்
Published on

தங்கம் விலை கடந்த 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. அதன்பின்னரும் விலை ஏறி வந்த நிலையில், நேற்று முன்தினம் விலை குறைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை குறைந்தே காணப்பட்டது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 540-க்கும், ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்து 320-க்கும் விற்பனை ஆனது. நேற்று கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 510-க்கும், ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.60 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.7,595-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.104-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

28-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,080

27-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,320

26-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,440

25-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,440

24-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,440

 கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

28-01-2025- ஒரு கிராம் ரூ. 104

27-01-2025- ஒரு கிராம் ரூ. 104

26-01-2025- ஒரு கிராம் ரூ. 105

25-01-2025- ஒரு கிராம் ரூ. 105

24-01-2025- ஒரு கிராம் ரூ. 105

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com