

தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறி வந்தது. கடந்த 8-ந்தேதி ஒரு பவுன் ரூ.90 ஆயிரத்தை தாண்டிய நிலையில், அதன் பின்னரும் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே போனது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்திலேயே பயணித்து வருகிறது.
தீபாவளியை பண்டிகையான நேற்று தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலை அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,920-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.95,360-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்து ரூ.97 ஆயிரத்து 440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.260 உயர்ந்து ரூ.12,180-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.188-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி 1 லட்சத்துக்கு 88 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
20-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 95,360
19-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 96,000
18-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 96,000
17-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 97,600
16-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 95,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
20-10-2025- ஒரு கிராம் ரூ.190
19-10-2025- ஒரு கிராம் ரூ.190
18-10-2025- ஒரு கிராம் ரூ.190
17-10-2025- ஒரு கிராம் ரூ.203
16-10-2025- ஒரு கிராம் ரூ.206