GOLD PRICE TODAY : அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம்

நேற்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 82,160-க்கும் விற்பனையானது.தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.
GOLD PRICE TODAY : அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம்
Published on

சென்னை:

சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

கடந்த வாரம் முழுவதும் உயர்ந்த தங்கம் விலை வார தொடக்க நாளான திங்கட்கிழமை சற்று குறைந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சவரனுக்கு 580 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,240-க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை சற்று குறைந்து ஒரு சவரன் ரூ. 82,160-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,220-க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 81,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 141 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

17-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,160

16-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,240

15-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,680

14-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,760

13-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,760

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

17-09-2025- ஒரு கிராம் ரூ.142

16-09-2025- ஒரு கிராம் ரூ.144

15-09-2025- ஒரு கிராம் ரூ.143

14-09-2025- ஒரு கிராம் ரூ.143

13-09-2025- ஒரு கிராம் ரூ.143

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com