GOLD PRICE TODAY : 2-வது நாளாக குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம்

நேற்று ஒரு கிராம் 9,145 ரூபாய்க்கும், ஒரு சவரன் 73,160 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
GOLD PRICE TODAY : 2-வது நாளாக குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம்
Published on

சென்னை:

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரு கிராம் 9,145 ரூபாய்க்கும், ஒரு சவரன் 73,160 ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 124 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

15-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,160

14-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,240

13-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,120

12-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,120

11-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,600

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

15-07-2025- ஒரு கிராம் ரூ.125

14-07-2025- ஒரு கிராம் ரூ.127

13-07-2025- ஒரு கிராம் ரூ.125

12-07-2025- ஒரு கிராம் ரூ.125

11-07-2025- ஒரு கிராம் ரூ.121

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com