GOLD PRICE TODAY: காலையில் அதிரடியாக குறைந்து மாலையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை

கடந்த 17 நாட்களில், தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,250-ம், சவரனுக்கு ரூ.10 ஆயிரமும் உயர்ந்து உள்ளது.தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்த நிலையில் ரூ.12,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
GOLD PRICE TODAY: காலையில் அதிரடியாக குறைந்து மாலையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
Published on

தங்கம் விலை தொடர்ந்து எகிறி வருகிறது. நாளுக்கு நாள் புதிய உச்சம் என்ற பாணியிலேயே தங்கம் விலை இருக்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.60 ஆயிரம் என இருந்த தங்கம் விலை தற்போது ரூ.95 ஆயிரத்தையும் கடந்து பயணிக்கிறது. அதிலும் இம்மாதத்தில் மட்டும் விலை கிடுகிடுவென உயர்ந்து விண்ணை முட்டும் அளவுக்கு தங்கம் சென்று இருக்கிறது என்று சொன்னாலும் அது மிகையாகாது.

அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு தங்கம் விலை இன்றும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை விலை அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு 250 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,950-க்கும் சவரனுக்கு 2000 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.95,600-க்கும் விற்பனையானது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்த நிலையில் ரூ.12,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை காலையில் ரூ.2000 குறைந்திருந்த நிலையில், தற்போது ரூ.400 உயர்ந்துள்ளது.

காலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.95,600க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, 96,000க்கு விற்பனையாகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com