GOLD PRICE TODAY : வார தொடக்கத்தில் குறைந்த தங்கம், வெள்ளி விலை... எவ்வளவு தெரியுமா?

ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது. தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.
GOLD PRICE TODAY : வார தொடக்கத்தில் குறைந்த தங்கம், வெள்ளி விலை... எவ்வளவு தெரியுமா?
Published on

சென்னை:

எல்லோரும் சேமிக்க நினைக்கும் தங்கம், ஏழைகளுக்கு ஏக்கம் தரும் ஒன்றாக மாறிப்போய்விட்டது. இந்த 2025ல், அந்த அளவுக்கு எட்டிப்பிடிக்க முடியாத விலை உயர்வை சந்தித்துள்ளது தங்கம். அதுமட்டுமல்ல தங்கத்துக்கு போட்டியாக வெள்ளியும் விலையேற்றத்தில் விண்ணை முட்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1 லட்சத்தை ஆண்டு இறுதிக்குள் தொட்டுவிடும் என தங்கம் விலை கணிக்கப்பட்டது. அதேபோல, அந்த விலையையும் தொட்டது. இந்தநிலையில், அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. அதற்கேற்றாற்போல், தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.

கடந்த வார தொடக்கத்தில் ஒரு சவரன் ஒரு லட்சத்து 560-க்கு தொடங்கி வார இறுதியில் ஒரு லட்சத்து 4ஆயிரத்து 800-க்கு விற்பனையானது. கடந்த வாரம் முழுக்க தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையானது.

அந்த வகையில் இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.13,020-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 281 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

28-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800

276-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800

26-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,120

25-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,560

24-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

28-12-2025- ஒரு கிராம் ரூ.285

27-12-2025- ஒரு கிராம் ரூ.285

26-12-2025- ஒரு கிராம் ரூ.254

25-12-2025- ஒரு கிராம் ரூ.245

24-12-2025- ஒரு கிராம் ரூ.244

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com