GOLD PRICE TODAY : தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு- இன்றைய நிலவரம்

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து சவரன் ரூ.64,200-க்கு விற்பனையானது. வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.
GOLD PRICE TODAY : தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு- இன்றைய நிலவரம்
Published on

சென்னை:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை 4 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.360 குறைந்து சவரன் ரூ.64,200-க்கு விற்பனையானது.

இதனைத் தொடர்ந்து வார இறுதி நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,045-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,360-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

21-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,200

20-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,560

19-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,280

18-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,760

17-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

21-02-2025- ஒரு கிராம் ரூ.109

20-02-2025- ஒரு கிராம் ரூ.109

19-02-2025- ஒரு கிராம் ரூ.108

18-02-2025- ஒரு கிராம் ரூ.108

17-02-2025- ஒரு கிராம் ரூ.108

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com