GOLD PRICE TODAY : புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை- சவரன் ரூ.82 ஆயிரத்தை நெருங்கியது

கடந்த 2 நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
GOLD PRICE TODAY : புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை- சவரன் ரூ.82 ஆயிரத்தை நெருங்கியது
Published on

சென்னை:

சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

அந்த வகையில் கடந்த செவ்வாய்கிழமை இதுவரை இல்லாத உச்சமாக சவரன் ரூ.81,200-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,240-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 81,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 142 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

11-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

10-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

09-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

08-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,480

07-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

11-09-2025- ஒரு கிராம் ரூ.140

10-09-2025- ஒரு கிராம் ரூ.140

09-09-2025- ஒரு கிராம் ரூ.140

08-09-2025- ஒரு கிராம் ரூ.140

07-09-2025- ஒரு கிராம் ரூ.138

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com